நகோயா,
ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்று வரும் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக மந்தனா இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இப்போட்டிக்கு முன்னதாக 11,000 ரன்களை எட்ட அவருக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சுகந்திகா குமாரியின் பந்தில் சிக்சர் விளாசிய மந்தனா, வெறும் 10 பந்துகளில் இந்த பிரமாண்ட மைல்கல்லை கடந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 9 ஆட்டங்களில் 788 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 120 ஆட்டங்களில் 5,411 ரன்களும், 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் 178 ஆட்டங்களில் 4,788 ரன்களும் மந்தனா எடுத்துள்ளார்.
இதன் மூலம் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய மற்றும் உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்(18) அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா தன்வசம் வைத்துள்ளார்.
இந்த இறுதிப்போட்டியில் மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.