கிரிக்கெட்

உலக சாதனைக்கு அருகில் மந்தனா, ஷபாலி... 2-வது டி20 போட்டியில் வரலாறு படைப்பார்களா?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று களமிறங்குகிறது.

ராய்ப்பூர்,

உலக சாதனைக்கு மிக அருகில் ஸ்மிருதி, ஷபாலி உள்ளனர்.

2-வது போட்டி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று களமிறங்குகிறது. முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இதற்கிடையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முக்கிய மைல்கற்களை எட்ட மிக அருகில் உள்ளனர்.

5,000 ரன்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக திகழ்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் 9 ரன்கள் எடுத்த அவர், இதுவரை 4,876 ரன்கள் சேர்த்துள்ளார்.

டி20 சர்வதேசப் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 124 ரன்கள் தேவைப்படுகின்றன. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இந்த இலக்கை எட்டினால், மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார்.

1,000 ரன்கள்

மறுபுறம், ஷபாலி வர்மாவும் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பில் உள்ளார். 2026-ம் ஆண்டில் இதுவரை 25 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 867 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரே ஆண்டில் 1,000 ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 133 ரன்கள் தேவைப்படுகின்றன. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளில் இந்த இலக்கை எட்டினால், மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார்.

இன்று சாதனை படைப்பார்களா?

இதனால் இன்றைய போட்டியில் இருவரும் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT