கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

டோனி டி சோர்ஜி பெயர் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்படவில்லை.

ஜோகன்னஸ்பர்க்,

டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கெபேகாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி அறி விக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் ஆடிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பேட்ஸ்மேன் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (32, 1 ரன்) நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மேத்யூ பிரீட்ஸ்கே சேர்க்கப்பட்டுள்ளார். ரையான் ரிக்கெல்டன் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்டு வரும் டோனி டி சோர்ஜி பெயர் தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்யப்படவில்லை.

தென்னாப்பிரிக்கா அணி:

டெம்பா பவுமா , மார்க்வெஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டாகியன் ரேட்ஸோ, ஆர்ட்ஸோ ரேட்சென், ஆர். கைல் வெர்ரே.

SCROLL FOR NEXT