கிரிக்கெட்

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் ஜோர்டன்

டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

விந்தோக்,

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜோர்டன் 150 ரன்கள் விளாசினார்.

ஒருநாள் கிரிக்கெட் தொடர்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி விந்தோக் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஜோர்டன் ஹெர்மன், கானர் களமிறங்கினர். கார்னர் 10 ரன்னில் அவுட் ஆன நிலையில் ஜோர்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜோர்டன் அபாரம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஜோர்டன் 93 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து ஆடிய ஜோர்டன் 126 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அறிமுகப்போட்டியில் 150 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜோர்டன் பெற்றார். அவர் 126 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 150 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்கா 44.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT