கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெற்றி: தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியது என்ன?

டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

கேப் டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டெஸ்ட்டில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 27ம் தேதி தொடங்கியது. பரபரப்பாக நடந்த இந்த டெஸ்ட்டில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டெம்பா பவுமா

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது;-

ரிக்கில்டன், முல்டர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துவீச்சாளர்களும் உற்சாகத்துடன் செயல்பட்டனர். ரபாடா பந்துவீச்சு மூலம் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அந்த தொடக்கத்தில் இருந்து அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

பந்துவீச்சே எங்கள் அணியின் முதுகெலும்பு. எங்கள் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றனர். களம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளபோது அதற்கு எங்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதேபோல், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளபோது அதற்கு எங்களிடம் சிமோன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். மைதானத்தில் உள்ள ரசிகர்களும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் சிறப்பான கிரிக்கெட்டை கண்டுகளித்தனர் என நம்புகிறேன்

என்றார்.

SCROLL FOR NEXT