கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் தொடங்கும் இந்த டி20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் நமீபியாவில் நடைபெற உள்ளன.
ஆக. 28; நமீபியா - தென் ஆப்பிரிக்கா
ஆக. 29; தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே
ஆக. 31; நமீபியா - ஜிம்பாப்வே
செப். 1; ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா
செப். 3; நமீபியா - ஜிம்பாப்வே
செப். 4; நமீபியா - தென் ஆப்பிரிக்கா
செப். 6; இறுதிப்போட்டி
இந்த முத்தரப்பு டி20 தொடருக்குப்பின் நமீபியா , தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.