கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: நமீபியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

விந்தோக்,

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 348 ரன்கள் குவித்துள்ளது.

நமீபியா - தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ்

இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஜோர்டன் ஹெர்மன், கானர் களமிறங்கினர். கார்னர் 10 ரன்னில் அவுட் ஆன நிலையில் அடுத்து வந்த டோனி டி சோரிஸ் யுடன் ஜோடி சேர்ந்த ஜோர்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜோர்டன் ஹெர்மன் அதிரடி

ஜோர்டன் 93 பந்துகளில் சதம் விளாசினார். அதேவேளை, சோரிஸ் 72 ரன்களில் அவுட் ஆனார். அதேவேளை, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோர்டன் 126 பந்துகளில் 150 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்கா 348 ரன்கள் குவிப்பு

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா தரப்பில் அந்த அணியின் ரூபன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து, 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நோக்கி நமீபியா களமிறங்கி விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT