கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன்களாக ஒருநாள் போட்டிக்கு கேஷவ் மகராஜும், டி20 போட்டிக்கு பிஜோர்ன் பார்டீனும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னணி வீரர்களான எய்டன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ யான்சன், டெம்பா பவுமா, ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா

இதற்கிடையே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சினெதெம்பா கெஷிலே டி20 அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி ஈஸ்ட் லண்டனில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து டிசம்பர் 4-ம் தேதி கெபர்ஹாவிலும், டிசம்பர் 7-ம் தேதி கேப் டவுனிலும் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இதையடுத்து டிசம்பர் 10-ம் தேதி கிம்பர்லியிலும், 12-ம் தேதி பெனோனியிலும், 13-ம் தேதி செஞ்சூரியனிலும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதுடன், அணியின் பல்வேறு சேர்க்கைகளையும் பரிசோதிக்கும் நோக்கில் இந்தத் தேர்வு அமைந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி:

கேசவ் மஹாராஜ் (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்சி, ஜோர்ன் ஃபார்டுயின், ஜோர்டான் ஹெர்மன், டுவான் ஜான்சன், என்கோபானி மொகோயெனா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி என்கிடி, சினெதெம்பா குஷைல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

தென்ஆப்பிரிக்கா அணி:

ஜார்ன் ஃபோர்டுயின் (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், ஜெரால்ட் கோட்ஸி, கானர் எஸ்டெர்ஹூய்சென், டோனோவன் ஃபெரீரா, ஜோர்டான் ஹெர்மன், டுவான் ஜான்சன், க்வேனா மபாகா, நகோபானி மொகோய்னா, நகாபா பீட்டர், லுவான் சின்ட்ரீ, லுவான், லுவான்- பிரேனெலன் சுப்ரயன்

SCROLL FOR NEXT