தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் பென் மெக்கின்னி சேர்க்கப்பட்டுள்ளார். 22 வயதான டர்ஹாம் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பென் மெக்கின்னிக்கு முதல்முறையாக இங்கிலாந்து சீனியர் அணியில் இடம் கிடைத்துள்ளது. காயம் காரணமாக ஜேக்கப் பெத்தல் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பென் மெக்கின்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
இடதுகை பேட்ஸ்மேனான பென் மெக்கின்னி, கடந்த 2023ஆம் ஆண்டு தனது 18 வயதில் டர்ஹாம் அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 40 முதல்தர போட்டிகளில் விளையாடி 2,389 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 37.92 ஆகும். நடப்பு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 14 போட்டிகளில் 1,044 ரன்கள் குவித்து டர்ஹாம் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். மேலும், ஒட்டுமொத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். அவரது சராசரி 52.20 ஆகும்.
ஏற்கனவே இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடியுள்ள பென் மெக்கின்னி, 2023-24ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உள்ளது. சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான தொடரிலும் 145 ரன்கள் விளாசி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்
ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், ஹாரி புரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், எமிலியோ கே, டான் லாரன்ஸ், லியாம் பேட்டர்சன்-வைட், ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், பென் மெக்கின்னி