கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு

57 டி20, 71 ஒருநாள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட வீரர் ரசி வான் டெர் டசன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அவர் 57 டி20, 71 ஒருநாள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இது தொடர்பாக ரசி வான் டெர் டசன் கூறியதாவது,

"பெருமிதத்துடனும் ஆழ்ந்த நன்றியுணர்வுடனும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். தென் ஆப்பிரிக்கா ஜெர்சியை அணிவது என்பது, ஒருவித மனவுறுதியையும் அர்ப்பணிப்பையும் கோரும் ஒரு சாதனையாகும். என் நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்தப் பயணம் பல ஆண்டுகால தியாகங்களால் ஆனது என தெரிவித்துள்ளார்.