சென்னை,
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.இந்நிலையில் காயம் காரணமாக சென்னை அணியின் முக்கிய வீரரான ஜேமி ஓவர்டன் விலகி உள்ளார்.
இந்த நிலையில், ஜேமி ஓவர்டனுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டயான் பாரெஸ்டர் சென்னை அணியில் இணைந்துள்ளார்.