லக்னோ,
ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோ அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றுள்ளது.
வரும் 12ம் தேதி லக்னோ அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணி வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில், ஹசரங்காவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.அதன்படி தென் ஆப்பிரிக்கா வீரர் ஜார்ஜ் லிண்டே மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.