கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு டிராவிட் பேட்டி

இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போதைய இந்திய அணியில் வீரர்களின் திறமையின் ஆழத்தை பார்க்கும் போது, இந்த முறை தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

நம்மிடம் சில தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் ஆல்ரவுண்டரையும் (ஹர்திக் பாண்ட்யா) இறக்க முடியும். இதே போல் ஜடேஜா, அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடப்போகும் நமது பேட்ஸ்மேன்களுக்கு 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பது என்னை பரவசப்படுத்துகிறது. அதே சமயம் அங்குள்ள சீதோஷ்ண நிலையில் சிறிது அதிர்ஷ்டமும் தேவையாகும். அது மட்டும் இருந்து விட்டால், நிச்சயம் நமது அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என்று நம்புகிறேன். கேப்டன் விராட் கோலி களத்தில் காட்டும் ஆர்வமும், தீவிரமும் மற்ற வீரர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

இந்தியாதென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT