லாகூர்,
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.