கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: இலங்கை பந்து வீச்சு தேர்வு

ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

முதல் டெஸ்ட்

இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.

இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT