கிரிக்கெட்

கடைசி டி20: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி

டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

லாகூர்,

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டி20 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றியது.

கடைசி டி20

இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சாஹிப்சாதா பர்ஹான் அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார்.

இலங்கை வெற்றி

இதனை தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 17.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றிபெற்றது. இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அதேவேளை, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT