கிரிக்கெட்

முதல் டி20: பாகிஸ்தானுக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

டாஸ் வென்ற இலங்கை முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 182 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டாஸ்

அதன்படி, பாகிஸ்தான், இலங்கை இடையேயான முதல் டி20 ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

இலங்கை 182 ரன்கள்

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர் லஹிரு உதாரா அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் நசீம் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT