கிரிக்கெட்

இலங்கை டெஸ்ட் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடிய இரு டெஸ்ட் தொடர்களையும் 0-1 என்ற கணக்கில் தாரைவார்த்தது.

கொழும்பு,

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா, அந்த பதவியில் இருந்து நேற்று திடீரென விலகினார். 2024-ம் ஆண்டு ஜன வரி மாதம் முதல் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர், அடுத்த தலைமுறையினரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்கும் வகையில் ஒதுங் குவதாகவும், ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 35 வயதான தனஞ்ஜெயா டி சில்வா இதுவரை 69 டெஸ்டு களில் விளையாடி 13 சதம் உள்பட 4,431 ரன்கள் எடுத்துள்ளார். 43 விக் கெட்டும் கைப்பற்றி இருக்கிறார். அவரது தலைமையில் இலங்கை அணி 18 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும். 8-ல் தோல்வியும், 3-ல் 'டிரா'வும் கண்டுள்ளது. இந்த ஆண்டில் அந்த அணி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீ சுக்கு எதிராக விளையாடிய இரு டெஸ்ட் தொடர்களையும் 0-1 என்ற கணக் கில் தாரைவார்த்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்ட னாக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இருக்கும் அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப்பையும் இனி கவனிப்பார். 31 வயதான குசல் மென்டிஸ் 75 டெஸ்டுகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். இலங்கை அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதில் இருந்து மென்டிசின் டெஸ்ட் கேப்டன்ஷிப் பயணம் தொடங்கும். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் 33.33 சதவீத புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கும் இலங்கை அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT