கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்து வீச்சு தேர்வு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கடந்த 2009ம் ஆண்டு ஐசிசி அறிமுகம் செய்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 9 முறை நடைபெற்றுள்ளது. இதில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடைசியாக 2024ம் ஆண்டு நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் டி20 உலகக்கோப்பை

இந்நிலையில், 10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து - இலங்கை

அதன்படி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.