கிரிக்கெட்

29 ஆண்டுக்கு பின் இலங்கை வீரர் மகத்தான சாதனை

29 ஆண்டுகளுக்கு பின் சோனல் தினுஷா சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில், இலங்கை வீரர் சோனல் தினுஷா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை தடுத்துள்ளார். ஏற்கனவே அவர் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்தார். இதனால் 29 ஆண்டுகளுக்கு பின் சோனல் தினுஷா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய சோனல் தினுஷா, 1997-க்கு பின் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இலங்கை வீரராக சாதனை படைத்துள்ளார்.

தற்போது 2வது இன்னிங்சில்190 ரன்களுக்கும் மேல் முன்னிலையுடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.