கிரிக்கெட்

விளம்பர படப்பிடிப்பில் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம்... இந்திய தொடரில் பங்கேற்பது சந்தேகம்!

ரச்சின் ரவீந்திராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆக்லாந்து,

இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

முதல் டி20

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. டி20 தொடர் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பர படப்பிடிப்பில் காயம்

இந்நிலையில், ஆக்லாந்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விளம்பரப் படப்பிடிப்பின்போது ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

படப்பிடிப்பின்போது, டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்ற அவர், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மெத்தையில் தவறான நிலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது வலது தோள்பட்டை விலகியது.

பெரிய பாதிப்பு இல்லை

காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் தோள்பட்டையில் பெரிய அளவிலான உள்காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், காயத்தில் இருந்து ரச்சின் ரவீந்திரா முழுமையாக குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதனால் இந்திய தொடரில் அவர் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் முக்கிய வீரர்

நியூசிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முக்கிய வீரராக ரச்சின் ரவீந்திரா உள்ளார்.

இதுவரை 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 759 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு ரச்சின் ரவீந்திராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT