மும்பை,
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகளிர் பிரீமியர் லீக் 2027 தொடர் ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5-வது சீசனாகும்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் என 5 அணிகள் பங்கேற்று வருகின்றன.போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் நகரங்கள் குறித்த முழுமையான விவரங்களை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
கடந்த 2026 சீசனில் போட்டிகள் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடைபெற்றன. அந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.