கிரிக்கெட்

ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை: ஸ்மித்

ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் தெரிவித்து உள்ளார். #SteveSmith

சிட்னி,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.குறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்த ஊதியம், போனஸ், போட்டி கட்டணம், ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஐ.பி.எல். தடை போன்றவற்றின் மூலம் ஏறக்குறைய தலா ரூ.30 கோடி வருவாயை இருவரும் பறிகொடுத்துள்ளனர்.

ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்து உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு