கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் சான்டனர் சிறப்பாக விளையாடி 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 32 ரன்களும் , பின் ஆலன் 23 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 168 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் தீக்சனா , சமீரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடுகிறது.