கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்று: தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்கவில்லை.

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கே றும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்கவில்லை.வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக 254 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பி ரிக்க அணி, கடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியதால் கூடுதல் நம்பிக்கை யுடன் களம் காணும். இன் றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதியை வெகுவாக நெருங்கி விடும்.