அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.