கிரிக்கெட்

சூப்பர்மேன் ஸ்டீவ் ஸ்மித்! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை

அதிக கேட்ச்களைப் பிடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

டர்பன்,

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத வீரர்களில் அதிக கேட்ச்களைப் பிடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் சாதனையை முறியடித்து ஸ்மித் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவை நாதன் லயன் பந்துவீச்சில் சிறப்பாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த ஸ்மித், பின்னர் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாமை அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். பெடிங்ஹாம் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தக் கேட்ச் மூலம் ஸ்மித்தின் டெஸ்ட் கேட்ச்களின் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்தது. ஜோ ரூட் 220 கேட்ச்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

ஸ்லிப் பகுதியில் ஸ்மித் காட்டிய அபாரமான ரியாக்ஷன் மற்றும் கேட்ச் பிடிக்கும் திறன் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியமான விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது இந்தச் சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக அவர் திகழ்வதை மீண்டும் நிரூபித்துள்ளது.

SCROLL FOR NEXT