மும்பை,
இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி அசத்தியிருந்தது.
35 வயதான சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதன்பிறகு ஐபிஎல் தொடரிலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில்,
“என்னால் முடிந்த அளவுக்கு கடுமையாக உழைத்து வருகிறேன். எல்லாம் சரியாகச் சென்றால், இந்திய அணியில் நான் மீண்டும் இடம்பிடிப்பேன்” என்றார்.