கிரிக்கெட்

மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ்?

மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி தொடர்களில் மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு சமீபத்தில் இடம் கிடைக்கவில்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மும்பை அணிக்காகக் களமிறங்க உள்ளார். அவரது தலைமையில் மும்பை அணி டி20 மற்றும் ஒருநாள் உள்ளூர் போட்டிகளில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரிலும், விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாகப் பொறுப்பேற்றால், மும்பை அணிக்கு அவரது அனுபவம் கூடுதல் பலமாக அமையும்.இருப்பினும், இரு தொடர்களுக்குமான மும்பை அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் அறிவிப்பு வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT