சென்னை,
டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. இப்போட்டி இரவு 7 மணிக்கு துவங்குகிறது.
இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர், இறுதிப்போட்டி சவாலாக இருக்கும் எனவும் அதேவேளை கோப்பையை வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கோப்பையை தட்டித் தூக்குவதற்கு சில இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை எனவும் உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்திற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் அளித்த பதில் கவனம் ஈர்த்துள்ளது. அதன்படி, “எல்லாரும் ஒரே வரியை சொன்னா எப்படி? புதுசா ஏதாச்சு சொல்லுங்க” என்று கூறினார்.