கிரிக்கெட்

ரிமோட் கார் இயக்கி விளையாடிய சூர்யவன்ஷி.. கலாய்த்த அணி நிர்வாகி

“இவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை” என்று கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். 15 வயதே ஆன இளம் புயலான சூர்யவன்ஷி, சர்வதேச அளவிலான டாப் பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் எந்த பயமும் இன்றி எதிர்கொண்டு அதிரடி காட்டி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியிலும் பும்ராவின் பந்தை சிக்சருக்கு விளாசினார்.

நேற்று ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் சூர்யவன்ஷி அதிரடி காட்டினார். 26 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மிரள வைத்தார். சூர்யவன்ஷியின் சிக்சர் விளாசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே, பயிற்சியின் போது ரிமோட் கார் ஒன்றை சூர்யவன்ஷி இயக்கி விளையாடும் காட்சிகளும் பரவி வருகின்றன. சூர்யவன்ஷி இந்த ரிமோட் காரை இயக்கி விளையாடியதை கேலி செய்த அணி நிர்வாகி ஒருவர், “இவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை” என்று கூறுகிறார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.