கிரிக்கெட்

சூர்யவன்ஷியை உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும்: ஸ்ரீகாந்த் வலியுறுத்தல்

இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட வரப்போகிறது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் 'சூர்ய வன்ஷி எல்லா வடிவிலான போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்த வீரர். நீங்கள் அவரை டெஸ்ட் போட்டியில் களம் இறங்க வைக்க விரும்ப வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவரை 15 பேர் கொண்ட அணி யிலாவது வைத்திருங்கள். அடுத்து இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட வரப்போகிறது.

உலகக் கோப்பை

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவ ருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விளையாட விடுங்கள். நீங்கள் உண்மையிலேயே சூர்யவன்ஷியை வளர்க்க விரும்பினால், அவரை 2027-ம் ஆண்டுக் கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும். ஒருநாள் அவர் தனி ஒருவராக உங்களுக்கு போட்டிகளை வென்று தருவார்' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT