கிரிக்கெட்

சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் பயணிக்க அனுமதி

இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கிரிக்கெட் அரங்கம் அதிரப்போவது உறுதியாக உள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் வரவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ள நிலையில் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் பயணிக்க பிசிசிஐ சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

15 வயதே ஆன சூர்யவன்ஷி இந்திய அணியின் சூழலுக்கு பழகிக்கொள்ளும் வகையில் இந்த அனுமதியை பிசிசிஐ வழங்கியுள்ள நிலையில் அனைத்து செலவுகளையும் பிசிசிஐயே ஏற்கும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.