இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் முதன்மையான 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், கொல்கத்தா, நியூசண்டிகார் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 6-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் லீக் சுற் றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் 16 ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் - அரியானா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரமன்தீப் சிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அரியானா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.