இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (நவம்பர் 18) நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா – ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.
கேரள அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை தாங்குகிறார். முகமது அசாருதீன், ரோகன் குன்னும்மல், விஷ்ணு வினோத், சல்மான் நிசார் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரிக்கி ஷேக் ரஷீத், அஷ்வின் ஹெப்பர், சவுரப் குமார் உள்ளிட்ட வீரர்கள் ஆந்திர அணி அணியில் உள்ளனர்
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆந்திரா அணியின் கேப்டன் ரிக்கி புய் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆந்திரா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.