கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: ஜம்மு-காஷ்மீர் அணியிடம் தமிழகம் தோல்வி

நியூசண்டிகாரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 131 ரன் வித்தியாசத்தில் அசாமை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 6 ரன் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரிடம் வீழ்ந்தது.

20 ஓவர் கிரிக்கெட்

19-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற் றுக்கு முன்னேறும். இதில் இந்தூரில் நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் தமிழக அணி, ஜம்மு-காஷ்மீரை (பி பிரிவு) சந்தித்தது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. கம்ரன் இக்பால் (70 ரன்), கேப்டன் சுப்ஹாம் ஹஜூரியா (53 ரன்) அரைசதம் அடித்தனர். தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன், கேப்டன் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், எம்.சித்தார்த். குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தமிழக அணி தோல்வி

பின்னர் ஆடிய தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 195 ரன்களே எடுத்தது. இதனால் ஜம்மு-காஷ்மீர் அணி 6 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் (67 ரன்), என்.ஜெகதீசன் (35 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்க வில்லை. முதல் ஆட்டத்தில் ரெயில்வேயை வீழ்த்திய தமிழக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். கடந்த ஆட்டத்தில் கைவிரலில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இந்த ஆட்டத்தில் ஆடவில்லை.

நியூசண்டிகாரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (சி பிரிவு) மத்திய பிரதேச அணி 131 ரன் வித்தியாசத்தில் அசாமை பந்தாடி 2-வது வெற்றியை சுவைத்தது. முதலில் ஆடிய மத்தியபிர தேச அணி 6 விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்தது. 5-வது வரிசையில் களம் புகுந்த கேப்டன் ரஜத் படிதார் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 13 சிக்சருடன் 135 ரன்கள் விளாசினார்.

SCROLL FOR NEXT