இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (நவம்பர் 18) நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா – ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுறது.
கேரள அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை தாங்குகிறார். முகமது அசாருதீன், ரோகன் குன்னும்மல், விஷ்ணு வினோத், சல்மான் நிசார் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆந்திர அணிக்கு ரிக்கி புய் கேப்டனாக செயல்படுகிறார். ஷேக் ரஷீத், அஷ்வின் ஹெப்பர், சவுரப் குமார் உள்ளிட்ட வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்
இரு அணிகளும் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனின் ஆட்டம் கேரள அணிக்கு முக்கியமானதாக இருக்கும். இந்தப் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது