19-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வரு கிறது.
போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.
இதில் நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி, கோவா அணியை சந்தித்தது.கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன் வித்தியாசத்தில் கோவாவை தோற்கடித்து 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றது.
இதில் முதலில் ஆடிய மும்பை அணி 18.5 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக முஷீர்கான் 44 ரன்னும், சாய்ராஜ் பட்டீல் 40 ரன்னும் எடுத்த னர். அடுத்து ஆடிய கோவா அணி 19 ஓவர்களில் 189 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மும்பை தரப்பில் சாய்ராஜ் பட் டீல் 3 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இன்னொரு ஆட்டத்தில் பீகார் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. யாஷ் தூள் (125 ரன்) சதம், தேஜஸ்வி சாஹியா (51 ரன்) அரைசதம் உதவியோடு டெல்லி நிர்ணயித்த 225 ரன் இலக்கை பீகார் அணி ஒரு பந்து மீதம் வைத்து விரட்டிப்பிடித்தது. யாஷ் தூள் சதம் வீணானது.