கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கோப்பை: கேரளாவுக்கு 226 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆந்திரா

ஷேக் ரஷீத் 39 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் இன்று நடைபெறும் எலைட் பிரிவு சி லீக் ஆட்டத்தில் கேரளா – ஆந்திரா அணிகள் மோதுகின்றன. மொகாலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆந்திர அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஷேக் ரஷீத், ஹேமந்த் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான தொடக்கம் அளித்தனர். ஹேமந்த் ரெட்டி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஷேக் ரஷீத் 39 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை

தொடர்ந்து களமிறங்கிய சீரம் வெங்கட ராகுல் அதிரடியில் மிரட்டினார். அவர் 30 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அஸ்வின் ஹெப்பர் 15 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார்.

ஆந்திர அணி

இதனால் ஆந்திர அணியின் ரன் வேகம் தொடர்ந்து அதிகரித்தது. குறிப்பாக 15-வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி ஓவரிலும் 19 ரன்கள் குவிக்கப்பட்டதால் ஆந்திர அணி வலுவான ஸ்கோரை எட்டியது.

இறுதியில் ஆந்திர அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேரள அணியின் பந்துவீச்சில் எம்.டி. நிதீஷ் 3 விக்கெட்டுகளையும், பிஜு நாராயணன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கார்த்திக் பி. நாயர், அப்துல் பாசித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணிக்கு 226 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT