புதுடெல்லி,
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடக்கிறது. இதில் எலைட் பிரிவில் கலந்து கொள்ளும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பி' பிரிவில் பீகார் இடம் பெற்றுள்ளது. தமிழ் நாடு, டெல்லி, அரியானா, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப். ரெயில்வே, சவுராஷ்டிரா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் முதல் 2 ஆட்டத்துக்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக புயல்வேக பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி யும், துணை கேப்டனாக சுராஜ் காஷ்யப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 வய தான சூர்யவன்ஷி பீகார் சீனியர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.
இதே போல் பெங்கால் அணியும் அறிவிக்கப்பட்டது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகேஷ்குமார் மற்றும் அபிஷேக் போரல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள் ளனர். கர்நாடக அணியில் முன்னாள் கேப்டன் மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் கோபால் கழற்றி விடப்பட்டனர். ஆர்.சமரன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.