சென்னை,
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான (20 ஓவர்) கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந்தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. எலைட் பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பீகார், டெல்லி, அரியானா, ரெயில்வே, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், சவுராஷ்டிரா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
தமிழக அணி தனது முதலாவது ஆட்டத்தில் 14-ந்தேதி ரெயில்வே அணியை இந்தூரில் சந்திக்கிறது. இதற்கான தமிழக அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் பயிற்சியின் போது காயமடைந்ததால் அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச் சாளர் ஆர்.சிலம்பரசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாய் கிஷோர் (கேப்டன்), துஷர் ரஹேஜா, அமித் சாத்விக், என்.ஜெகதீசன், சச்சின், ஆந்த்ரே சித்தார்த், ரித்திக் ஈஸ்வ ரன், ஷாருக்கான், சன்னி சந்து, ராஜ்குமார், குர்ஜப்னீத் சிங், கிஷோர், எம்.சித்தார்த், வருண் சக்ரவர்த்தி, அதிசயராஜ் டேவிட்சன், ஆர்.சிலம்பரசன்.