இந்தூர்,
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் பீகாருக்கு எதிராக டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் எலைட் குரூப் பி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - பீகார் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் தற்போது நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பீகார் அணி முதலில் பந்துவீச உள்ளது.
இதுவரை ஒரு வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ள தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பீகார் அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்புடன் களமிறங்குகின்றன.