மும்பை,
மீண்டும் ஐதராபாத் அணிக்குத் திரும்பியுள்ளா நடராஜன்.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே வீரர்கள் டிரேட் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் மீண்டும் ஐதராபாத் அணிக்குத் திரும்பியுள்ளார். அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
2025-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது. தற்போது ரூ.5 கோடி ஒப்பந்த தொகையில் மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்பு 2020 முதல் 2024-ம் ஆண்டு வரை ஐதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், 2024 சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றி பயணத்தில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், ஐதராபாத் அணிக்காக விளையாடிய இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரி, தனது தற்போதைய ஒப்பந்தத் தொகையான ரூ.40 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்தார்.