கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி:

சிகந்தர் ராசா , பிரையன் பென்னட், ரியான் பர்ல், தனகா சிவாங்கா, பென் குர்ரன், பிராட் எவன்ஸ், வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிளெஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ன்காராவா, தபா நகாராவா, நியூமன்டன் நகாராவா.