கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: அபிஷேக் சர்மா முதலிடம்

13 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த அபிஷேக் மொத்தம் 897 புள்ளிகள் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா ஒரு இடம் முன்னேறி மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்துள்ளார். நியூசிலாந் துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் 13 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த அபிஷேக் மொத்தம் 897 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இஷான் கிஷன்

இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியாவின் இஷான் கிஷன், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 2-வது, 3-வது 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் அவர் 3-வது இடத்துக்கு (866 புள்ளி) சரிந்தார். பாகிஸ்தான் கேப்டன் சஹிப்சதா பர்ஹான் 2-வது இடம் (883) வகிக்கிறார். இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 4-ல் இருந்து 9-வது இடத் துக்கு சறுக்கினார். சஞ்சு சாம்சன் 20-வது இடத்திலும் (6 இடம் அதிகரிப்பு). நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 37-வது இடத்திலும் (20 இடங்கள் உயர்வு). இந்திய இளம் புயல் சூர்யவன்ஷி 45-வது இடத்திலும் (9 இடம் ஏற்றம்) உள்ளனர்.

ரஷித் கான்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆப் கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 11-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), அர்ஷ்தீப்சிங் 15-வது இடத்திலும் (6 இடம் உயர்வு), வருண் சக்ரவர்த்தி 30-வது இடத்திலும் (10 இடம் தளர்வு) இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT