துபாய்,
20 ஓவர் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரி சையில் இந்திய வீரர்கள் இஷான் கிஷன் (904 புள்ளி) முதலிடத்திலும், அபி ஷேக் ஷர்மா (891) 2-வது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் சகிப்சதா பர்ஹான் (883) 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.
இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (798) 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த தன் மூலம் ஏற்றம் கண்டுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் (793) 5-வது இடத்தில் தொடருகிறார்.
இந்திய வீரர் திலக் வர்மா (ஒரு இடம் முன்னேற்றம்) 9-வது இடத்திலும். இலங்கை வீரர் குசல் மென்டிஸ் (3 இடம் உயர்வு) 23-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீசின் ரூதர்போர்டு (13 இடம் அதிகரிப்பு) 24-வது இடத்திலும், இந்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (4 இடம் முன்னேற்றம்) 27-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் மாஸ் சதாக (187 இடம் ஏற்றம்) 45-வது இடத்திலும் இருக்கின்றனர்.