கிரிக்கெட்

டி20 போட்டி: வங்காளதேசத்துக்க்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

சட்டோகிராம்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி கைப்பற்றிய நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. கேடீன் கிளார்க், டேன் கிளேவர் ஆகியோர் அதிகபட்சமாக தலா 51 ரன்கள் எடுத்தனர்.

வங்காளதேசம் தரப்பில் ரிஷத் ஹுசேன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.