புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த ஆட்டங்கள் டெல்லியில் செப். 13, 15, 17-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக இப்ராஹிம் சத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் அணிக்கு திரும்புகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி:
இப்ராஹிம் சத்ரான் , ரஹ்மானுல்லா குர்பாஸ் , நூர் ரஹ்மான் , செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.