கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய அணி

டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், டி20 தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.