கோப்புப்படம் 
கிரிக்கெட்

டி20 பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

துபாய்,

இந்திய அணியானது தனது முதல் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் அணிக்கு சிறந்த தொடக்கத்தை தந்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் மொயீன் அலி அதிரடி காட்ட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய மொயீன் அலி 20 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 ரன்கள் குவித்தார்.

பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது தற்போது விளையாடி வருகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை